Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனுஷ்கா 50 படத்தில் இணைந்த விக்ரம் பிரபு!

Webdunia
வெள்ளி, 22 மார்ச் 2024 (07:05 IST)
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

கடைசியாக பாகுபலி படத்தில் நடித்த அனுஷ்கா, அதன் பின்னர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. மேலும் அவரின் உடல் எடையும் ஏறி குண்டாக காணப்பட்டார். அதனால் அவர் சினிமாவை விட்டு விலகி எடைகுறைப்பில் ஈடுபட்டார்.

கடைசியாக அவர் தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் இப்போது அனுஷ்கா இப்போது தனது 50 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் கிரிஷ் இயக்கி வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து 2010 ஆம் ஆண்டு வேதம் என்ற படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க தமிழ் நடிகரான விக்ரம் பிரபு ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவர் தற்போது ஷூட்டிங்கில் கலந்துகொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments