Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் ரசிகர் மன்றத்தில் ஜாதி மதம் பிரச்சனையா? அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (08:28 IST)
சீயான் விக்ரம் ரசிகர் மன்றத்தில் உள்ள நிர்வாகிகள் இடையே சாதி மற்றும் மதம் குறித்த பிரச்சனைகள் இருந்து வருவதாக சமூக வலைதளங்களில் வெளிவந்த செய்தியை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அகில இந்திய விக்ரம் ரசிகர் மன்ற தலைவர் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 
சியான் விக்ரம் ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்றங்கள் எந்தவித ஜாதி, மதம் மற்றும் அரசியல் சார்ந்து செயல்படக்கூடாது. மதம், ஜாதி மற்றும் அரசியல் சம்மந்தமில்லாமல் அண்ணன் சியான் விக்ரம் அவர்களின் ரசிகர்கள் என்ற எண்ணத்தில் மட்டும் ரசிகர்கள் செயல்பட வேண்டும். இதற்கு மாறாக மதம், ஜாதி மற்றும் அரசியல் சம்பந்தப்படுத்தி அதன் தலைவர்களை சம்பந்தப்படுத்தும் ரசிகர்கள் என்ற பெயரில் வெளியிடப்படும் செய்திகள் நமது கொள்கைகளுக்கு எதிரானவை மற்றும் கடும் கண்டனத்துக்கு உரியது 
 
இது போல் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை மிகவும் கண்டிப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'அமரன்’ படத்தை தூக்க மறுக்கும் தியேட்டர்கள்.. ‘கங்குவா’ படத்திற்கு சிக்கல்..!

அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: முன்ஜாமீன் மனு தாக்கல் செய்த கஸ்தூரி..!

மாடர்ன் உடையில் யாஷிகாவின் கிளாமர் க்ளிக்ஸ்!

மெல்லிய சேலையில் க்யூட்டான போஸ் கொடுத்த ஜான்வி கபூர்!

ஆர்த்தியை சீண்ட சர்ச்சையான கதையைக் கையில் எடுக்கும் ஜெயம் ரவி…!

அடுத்த கட்டுரையில்
Show comments