விஷால் நடித்த வீரமே வாகை சூடும் திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி வெளியான நிலையில் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதையடுத்து விஷாலின் அடுத்த படமாக லத்தி என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் படத்தில் இருந்து ஒரு துணுக்குக் காட்சியைப் படக்குழு வெளியிட்டது. அதன் பின்னர் சென்னையில் படத்தின் டீசர் ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இந்த படத்தை விஷாலின் நண்பர்களான ராணா மற்றும் நந்தா ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த தேதியில் ரிலீஸாகவில்லை. வம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்யலாம் என படக்குழுவினர் திட்டமிட்ட நிலையில் விஷால் அதுபற்றிக் கண்டுகொள்ளவே இல்லை என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இப்போது படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.