தயாரிப்பாளர்களிடம் ஆலோசிக்காமல் திடீரென தன்னிச்சையாக வேலைநிறுத்தம் போராட்டம் ஆரம்பித்துள்ள திரையரங்கு உரிமையாளர்கள் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றார் விஷால். தயாரிப்பாளர் நலனுக்காக ஒரு மாதத்திற்கு முன்பே அறிவித்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்காத திரையரங்கு அதிபர்கள் தற்போது அவர்களுக்கு பாதிக்கின்றது என்பது உடனடி வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த டெக்னாலஜி உலகில் இனியும் தியேட்டரை நம்பி பிரயோசனமில்லை என்று விஷால் அதிரடியாக முடிவெடுத்துள்ளார். ஒரு படத்தின் தயாரிப்பாளர் சாட்டிலைட், டிடிஎச், கேபிள் டிவி, அமேசான் போன்ற இணையதளங்கள் ஆகியவற்றுக்கு நேரடியாக படத்தை விற்பனை செய்தால் சின்ன பட்ஜெட், நடுத்தர பட்ஜெட் படங்கள் கண்டிப்பாக போட்ட முதலீடை எடுத்துவிடும் என்றும் படம் நல்ல ரிசல்ட் கிடைத்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
விஸ்வரூபம் படத்தின் போதே கமல்ஹாசன் இந்த திட்டத்தை அறிவித்தார். ஆனால் அப்போது திரையரங்கு அதிபர்கள் ரெட் கார்ட் போட்டு பயமுறுத்தியதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது சங்கத்தின் தலைவர் என்ற முறையில் அதே திட்டத்தை கையில் எடுக்கின்றார் விஷால். அனேகமாக திரையரங்குகள் அனைத்தும் கல்யாண மண்டபங்களாக மாறும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே கூறப்படுகிறது