Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிம்மதியற்ற இரவுகள் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.. நடிகர் விஷாலின் திடீர் பதிவு..!

Mahendran
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (12:13 IST)
நடிகர் விஷால் தனது சமூக வலைதளத்தில் நிம்மதியற்ற இரவுகள் சென்று கொண்டிருக்கின்றன என கேரள மாநிலத்தில் நடந்த நிலச்சரிவு குறித்து பதிவு செய்துள்ளார். 
 
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் நிகழ்ந்த நிலச்சரிவில் 300க்கும் அதிகமானோர் பலியான நிலையில் இன்னும் காணாமல் போனவர்களை தேடுதல் செய்யும் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. 
 
இந்த நிலையில் இந்த சோக நிகழ்வுக்கு விஜய், கமல்ஹாசன், சூர்யா, விக்ரம் உள்பட பலர் தங்கள் சமூக வளங்களில் பலியானோர்களுக்கு இரங்கல் தெரிவித்த நிலையில் நடிகர் விஷாலும் சற்று முன் தனது சமூக வலைதளத்தில் இது குறித்து பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
 
நிம்மதியற்ற இரவுகள் கடந்து சென்று கொண்டிருக்கின்றன கேரளாவில் நடந்த துயர சம்பவம் எல்லோருடைய மனதிலும் மிகுந்த வலியை ஏற்படுத்தி உள்ள நிலையில். 
நாம் ஒவ்வொரு நாட்களையும் கடப்பது என்பது மிகுந்த மன வேதனையுடன் கடந்து சென்று கொண்டிருக்கிறோம்.
 
இயற்கை முன் மனிதர்கள் எதுவும் செய்ய முடியாது என்றாலும் கூட இந்த துன்பமான நிகழ்வை மனது ஏற்க மறுக்கிறது.
 
சாதி மத பேதமின்றி இந்நிகழ்வில் அனைவரும் கைகோர்த்து தங்கள் வாழ்வாதாரத்தை உறவினர்களை தங்களுடைய இருப்பிடத்தை இழந்து நிற்கதியாய் நிற்கும் அந்த மக்களுக்கு நாம் ஒன்றிணைந்து உதவி செய்வோம்.
 
இந்த துன்பமான நிகழ்வில் தங்களுடைய உயிரை துச்சம் என நினைத்து மக்களைக் காக்க போராடிவரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
 
இந்நிகழ்வினை வீண் அரசியல் ஆக்காமல் மக்களுக்கு உதவிடும் வகையில் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை தீட்டுமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’… பின்னணி என்ன?

கேம் சேஞ்சரோடு மோதுகிறதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

அடுத்த கட்டுரையில்
Show comments