Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

டிவிட்டரில் புலம்பிய விஷ்ணு விஷால் – காரணம் யார்?

டிவிட்டரில் புலம்பிய விஷ்ணு விஷால் – காரணம் யார்?
, வெள்ளி, 7 டிசம்பர் 2018 (15:19 IST)
நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் தனது டிவிட்டரில் சட்டங்களை மதித்து ஒழுங்காக நடப்பவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் வென்னிலாக் கபடிக்குழு மூலம் தமிழ்சினிமாவிற்குக் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அதன் பிறகு நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து அதில் நடித்து வெற்றியும் பெற்று வருகிறார். மிகப்பெரிய மார்கெட் இல்லையென்றாலும் தன்னை நம்பிப் பணம் போடும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாத ஹீரோவாக உருவாகியுள்ளார்.

இந்நிலையில் அவர் தயாரித்து நடித்துள்ள சிலுக்குவார் பட்டி சிங்கம் எனும் திரைப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி ரிலிஸ் ஆவதாக இருந்தது. இதற்காக அவர் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையான அனுமதியும் பெற்றிருந்தார். ஆனால் நேற்று தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து வெளியான ஒரு அறிக்கை அவரை மிகவும் சங்கடப் படுத்தியுள்ளது.

டிசம்பர் 21 முதல் ஜனவரி 10 முதல் தயாரிப்பாளர்கள் தங்கள் விருப்ப்படி படங்களை வெளியிட்டுக் கொள்ளலாம் என சங்கம் அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதன்படி தனுஷின் மாரி 2 புதிதாக டிசம்பர் 21 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீட்டில் கலந்து கொள்கிறது. அதனால் விஷ்ணுவின் சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்திற்குப் போதுமான தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதையொட்டியே இந்த கோபமானப் புலம்பல் டிவிட்டை வெளியிட்டிருக்கிறார்.
webdunia

அந்த டிவிட்டில் ‘ கட்டுப்பாடுகள்.. பின்பு கட்டுப்பாடுகள் இல்லை… சட்டங்களை பின்பற்றும் நபர்களுக்கு இப்படிதான் நீதி கிடைக்குமா?..இது எனது படங்களுக்கு முதல்முறையாக இல்லை… இரண்டாவது முறையாக நடக்கின்றன… பின் எதற்காக விதிமுறைகள் ..?’ எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாலுப் படம் எடுத்துவிட்டு பேசுகிறேனா ? பா ரஞ்சித் காட்டம்