Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மை பேபி...பேட்மிட்டன் வீராங்கனையுடன் நெருக்கமாக புத்தாண்டு கொண்டாடிய விஷ்ணு விஷால் !

Webdunia
வியாழன், 2 ஜனவரி 2020 (12:49 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் கூடவே பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். 
 
இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 7 வருடங்கள் ஆன பின்னர் குடும்பத்தில் பல குழப்பங்கள் நிலவியது. காரணம், விஷ்ணு விஷால்  தன்னுடன் நடித்து வந்த நடிகைகளுடன் நெருக்கமாக பழகி வந்ததால் கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சனை வெடித்தது. பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால்  கடந்த ஆண்டு பரஸ்பர மனதுடன் இருவரையும் விவாகரத்து செய்துகொண்டனர். 
 
பின்னர் நடிகை அமலா பாலுடன் இணைத்து விஷ்ணு விஷால் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் அந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து பேட்மிண்டன் வீராங்கனையான  ஜுவாலா கட்டாவுடன் தோழி என கூறி நெருக்கமாக பழகி வந்தார். இந்நிலையில் தற்போது ஊரே பார்த்து வாய்பிளக்கும் வகையில் ஜுவாலா கட்டாவுடன் நெருக்கமாக புத்தாண்டு கொண்டாடி புகைப்படமெடுத்து "மை பேபி" என குறிப்பிட்டு  ஜுவாலா சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் பார்ப்பதற்கு இருவரும் காதலை வெளிப்படுத்துவது போன்று உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தெலுங்கு படத்தில் ‘வேள்பாரி’ நாவலின் காட்சிகள்? - கொதித்தெழுந்த இயக்குனர் ஷங்கர்!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments