சூப்பர் ஸ்டாரின் பேட்ட மற்றும் அல்டிமேட் ஸ்டாரின் விஸ்வாசம் ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் விருந்தாக ஜனவரி 10 வெளியாகி இருந்தது. இரண்டு தரப்பு ரசிகர்களாலும் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகிய இந்த இரண்டு படங்கலும் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூல் சாதனையை குவித்து வருகிறது.
விஸ்வாசம் பேமிலி ஆடியன்ஸ் பார்க்கக்கூடிய படம் என்பதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். அஜித்தின் விஸ்வாசம் படம் வெளியான நாள் முதல் இன்று வரை தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் ஹவுஸ்புல் காட்சிகள் தான்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளிவந்த விஸ்வாசம் படம் இரண்டு இடங்களில் மட்டும் கொஞ்சம் நஷ்டத்தை சந்திக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கேரளாவில் சற்று தோல்வியை தழுவிய இப்படம் அடுத்தது அமெரிக்காவிலும் சிறிதளவு தோல்வியை சந்திக்கும் என கூறப்படுகின்றது. அமெரிக்காவில் மட்டும் அதாவது 30 முதல் 40 லட்சம் வரை நஷ்டம் ஏற்படலாம் என தெரிகின்றது.
பேட்ட விஸ்வாசம் இந்த இரண்டு படங்களும் உலகம் முழுக்க முதல் நாளில் நல்ல வசூலை செய்திருந்தது. முதல் நாளில் பேட்ட திரைப்படம் ரூ 48 கோடி வசூல் செய்தது. அதே போல் தல அஜித்தின் விஸ்வாசம் ரூ 43 கோடி வசூல் செய்துள்ளாதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.
நேற்றோடு படம் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையில் விஸ்வாசம் தமிழக்தில் மட்டும் ரூ 60 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாம். ஆனால் , பேட்ட6 நாட்களில் வசூல் 48 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இதனை வைத்து பார்க்கும்போது ரஜினியின் பேட்ட படத்தை பின்னுக்கு தள்ளி விஸ்வாசம் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.