பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும் தொகுப்பாளினியுமான அர்ச்சனா ஒரு மாதத்திற்கு முன்னால் தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்துள்ளதாக கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அர்ச்சனா தனது மகளுடன் கலந்து கொண்டார். அப்போது வீடியோ காலில் அவரது கணவர் தனது மனைவிக்கு வாழ்த்து கூறினார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் நானும் என் கணவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய முடிவு செய்தோம் என்றும் ஆனால் எனது மகள் சாரா உங்கள் இருவரால் பிரிந்து வாழ முடியுமா என்பதை யோசித்துக் கொள்ளுங்கள் என்று கூறியதால் நாங்கள் யோசித்து அந்த முடிவை கைவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பேட்டியில் அவர் தனது கணவர் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது அன்பு தான் ஜெயிக்கும் என்று ஆணித்தரமாக அர்ச்சனா கூறி இருந்தார் என்பது தெரிந்தது.