பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியான திவ்யா, பாரிஸில் தன்னையும் தன் கணவரையும் போலிஸார் தீண்டத்தகாதவர்கள் போல நடத்தினர் என குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்தவர் திவ்யா. இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்காக இவருக்கென்றே ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில் திருமணம் முடிந்து பாரிஸுக்கு தேனிலவு சென்ற போது அந்த நாட்டு போலிஸாருடன் நடந்த சம்பவம் ஒன்றை இவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இன்ஸ்டாகிராம் உரையாடலில் ‘எங்கள் பாஸ்போர்ட் மற்றும் பணம் இருந்த பர்ஸை யாரோ திருடி விட்டார்கள். அது சம்மந்தமாக அந்த நாட்டு போலிஸ் நிலையத்தில் புகாரளிக்க சென்ற போது, மூன்று ஸ்டேஷனுக்கு மேல் எங்கள் புகாரை எடுத்துக்கொள்ளாமல் அலையவிட்டனர். நான்காவதாக ஒரு ஸ்டேஷனில் தொலைந்த பொருட்களுக்கான இன்சூரன்ஸ் தொகையை கிளைம் செய்துகொள்ளுங்கள் என சொல்லிவிட்டனர். நாங்கள் சிசிடிவி கேமரா மூலமாக கண்டுபிடிக்க மாட்டீர்களா எனக் கேட்டபோது, எங்களை பார்த்து சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். எங்கள் பொருட்கள் தொலைந்து போனதைவிட அவர்கள் எங்கள் தீண்டத்தகாதவர்கள் போல நடத்தியதுதான் இன்னமும் வருத்தம் அளிக்கிறது’ எனக் கூறியுள்ளார்.