தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.
கொரோனா வைரஸ் பரவுததால் மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். இதற்கிடையில் தமிழகம் முழுவதும் வருகிற மே 18ம் ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதனால் வெளியூர் சென்ற சிலர் வீடு திரும்ப முடியாமல் முழித்துக்கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் தொகுப்பாளினி மணிமேகலை வேலை காரணமாக வெளியூர் சென்றுள்ளார். இதனால் சென்னை திரும்ப முடியாமல் கிராமம் ஒன்றில் மாட்டிக்கொண்டுள்ளார். அங்கிருந்த படியே கிராம குழந்தைகளுடன் விளையாடுவது , முறுக்கு சுடுவது உள்ளிட்ட வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் இன்று தனது 30- வது பிறந்தநாளை கொண்டாடும் மணிமேகலைக்கு அவரது கணவர் உசைன் செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு " இந்த பர்த்டே ஒரே ஹேப்பியா இருக்கு" என மணிமகேலை மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கூறி வருகின்றனர். இதேபோல் சமீபத்தில் கணவர் உசைன் பிறந்தநாளுக்கு மணிமேகலை சர்ப்ரைஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.