Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அசுரன் கதையைதான் வெற்றிமாறன் ரஜினிக்கு சொன்னாரா?

அசுரன் கதையைதான் வெற்றிமாறன் ரஜினிக்கு சொன்னாரா?
, வெள்ளி, 26 மார்ச் 2021 (14:56 IST)
இயக்குனர் வெற்றிமாறன் தன்னை சந்தித்து ஒரு கதையை சொன்னதாகவும் ஆனால் அதில் அரசியல் கருத்துகள் தீவிரமாக சொல்லப்பட்டு இருந்ததால் தான் நிராகரித்ததாகவும் ரஜினிகாந்த் ஒரு மேடையில் தெரிவித்திருந்தார்.

தமிழ் சினிமாவில் தரமான படங்களை எடுத்து வந்த வெற்றிமாறன் முதல் முதலாக தனது படங்களில் சமூகநீதி கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கிய படம் அசுரன். அந்த படத்தில் தனுஷ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நிலையில அவருக்கு தேசிய விருது அளிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமான மேடை ஒன்றில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்தை நான்கு முன்னணி கதாநாயகர்கள் மறுத்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குனர் வெற்றிமாறன் ரஜினியை சந்தித்து ஒரு கதை சொல்லியிருந்தார். ஆனால் அந்த படம் நடக்கவில்லை. இடையில் ஒரு மேடையில் பேசிய ரஜினிகாந்த் ‘வெற்றிமாறன் ஒரு சூப்பரான கதை சொன்னார். ஆனால் அதில் பயங்கரமான அரசியல் கருத்துகள் இருந்ததால் நான் யோசித்தேன்’ எனக் கூறியிருந்தார். இந்நிலையில் இப்போது ரஜினிக்கு வெற்றிமாறன் சொன்ன கதை அசுரன்தானா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இணையத்தில் கவனம் பெற்ற யோகி பாபுவின் மண்டேலா… இந்த எழுத்தாளரின் சிறுகதையில் இருந்துதான் உருவானதா?