Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

Advertiesment
Cinema

Prasanth Karthick

, ஞாயிறு, 4 மே 2025 (11:16 IST)

சமீபத்தில் யோகி பாபு நடித்த படத்தின் தயாரிப்பாளர், அவர் மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தமிழ் சினிமாவில் துணை கதாப்பாத்திரங்களில் தோன்றி, முக்கிய காமெடி நடிகராக வளர்ந்துள்ளவர் யோகி பாபு. தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் யோகி பாபு, ‘கஜானா’ என்ற படத்தில் நடித்துள்ளார். வேதிகா, இனிகோ பிராபகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை இயக்குனர் பிரபதீஸ் இயக்கியுள்ளார்.

 

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில் அதில் யோகி பாபு கலந்துக் கொள்ளவில்லை. அதுகுறித்து குற்றம் சாட்டி பேசிய தயாரிப்பாளர் ராஜா “இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு யோகி பாபு வராதது கேவலமான விஷயம். இந்த ப்ரொமோசனில் கலந்து கொள்ள அவர் ரூ.7 லட்சம் கேட்டார். பட வெளியீட்டு விழாவிற்கு அவர் வரவில்லை என்றால் அவர் நடிகனாக இருக்கவே தகுதியில்லை” என பேசியிருந்தார்.

 

இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து வருத்தம் தெரிவித்து பேசிய இயக்குநர் பிரபதீஸ், தயாரிப்பாளர் ராஜா கருத்துக்கும், கஜானா திரைப்படத்திற்கும்  எந்த சம்பந்தமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். தயாரிப்பாளர் ராஜா சொன்னதுபோல தான் ப்ரொமோஷனில் கலந்து கொள்ள பணம் கேட்கவில்லை என்று யோகி பாபுவும் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!