Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான் இந்தியா ரிலீஸுக்காகதான் ஆங்கிலத் தலைப்பு- இயக்குனர் வெங்கட்பிரபு பகிர்ந்த தகவல்!

vinoth
திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (07:50 IST)
இந்த ஆண்டில் வெளியாகவுள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக உருவாகி வருகிறது விஜய்யின் GOAT திரைப்படம். இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனது. ஆகஷன், செண்ட்டிமெண்ட், நகைச்சுவை என வழக்கமான விஜய்யின் மாஸ் மசாலா படமாக கோட் இருக்கும் என்பதை டிரைலர் கோடிட்டு காட்டுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் டி ஏஜிங் லுக் சில வினாடிகளே வந்து சென்றது.

இதையடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார் இயக்குனர் வெங்கட்பிரபு. அப்போது அவரிடம் படத்துக்கு ஏன் ஆங்கிலத் தலைப்பு வைத்தீர்கள்? எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த வெங்கட்பிரபு “தற்போது படங்கள் தமிழ் தாண்டியும் ரிலீஸாவதால் பேன் இந்தியா ரசிகர்களுக்கு புரிந்து கொள்வதற்காக ஆங்கிலத் தலைப்பு வைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது” எனப் பதிலளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இளவரசி போன்ற மிடுக்கான உடையில் மிருனாள் தாக்கூரின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

அமரன் படத்தின் ஓடிடி ரிலீஸைத் தள்ளிவைக்கணும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை!

கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’… பின்னணி என்ன?

கேம் சேஞ்சரோடு மோதுகிறதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

யார் வந்தா என்ன?... வணங்கான் படத்தை துணிந்து இறக்கும் இயக்குனர் பாலா?

அடுத்த கட்டுரையில்
Show comments