Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விக்ரம் படத்தில் இருந்து சத்யன் சூரியன் விலகியது ஏன்? வெளியான ரகசியம்!

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (15:13 IST)
நடிகர் கமல் நடிப்பில் லோகேஷ் இயக்கும் விக்ரம் படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் விலகியது குறித்து தகவல்கள் கசிந்துள்ளன.

மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் இயக்குனர் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.  இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்திருந்தாலும், கமல் தேர்தலில் பிஸியாக இருந்ததால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. தேர்தலில் கமல் தோல்வி அடைந்ததை அடுத்து இப்போது படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் லோகேஷின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சத்யன் சூரியன் இந்த படத்தில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது அதற்கான காரணம் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படத்துக்கு 90 லட்சம் சம்பளம் வாங்கிய சத்யன் சூரியனிடம் 35 லட்ச ரூபாய்தான் சம்பளம் தர முடியும் என ராஜ்கமல் நிறுவனம் அடித்து பேசி சம்மதிக்க வைத்துவிட்டதாம். ஆனாலும் குறிப்பிட்ட தேதியில் ஷூட்டிங் தொடங்காத நிலையில் கடுப்பான அவர் இந்த படத்தில் இருந்து விலகி தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆகி விட்டாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வெல்லுமா இந்தியா? அமெரிக்க வீரரை வீழ்த்திய இந்திய வீரர்..!

நான்காவது கணவரை பிரிந்த சோகம்! மதுவுக்கு அடிமையான ஜெனிபர் லோபஸ்!

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அடுத்த கட்டுரையில்
Show comments