நடிகர் ரஜினிகாந்தை சத்யராஜ் கடுமையாக விமர்சிப்பது ஏன் என்ற கேள்விக்கு சினிமா இயக்குனர் சித்ரா லட்சுமனன் பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் என்சைக்ளோபீடியா என்று சொன்னால் அது பிலிம் நியுஸ் ஆனந்தனுக்கு பிறகு சித்ரா லட்சுமனன்தான். தமிழ் சினிமாவில் மக்கள் தொடர்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பல பாத்திரங்களை வகிக்கும் அவர் இப்போது டூரிங் டாக்கீஸ் என்ற இணையதள சேனலை தொடங்கி அதில் சினிமா சம்மந்தமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
அதில் ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வரும் அவரிடம், ரசிகர் ஒருவர் நடிகர் சத்யராஜ் ஏன் ரஜினிகாந்தை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்று கேட்க அதற்கு சித்ரா லட்சுமனன் ‘அவர்கள் இருவருக்கும் சினிமா சம்மந்தமாக எந்தவொரு கருத்து வேறுபாடும் கிடையாது. ஆனால் 1996 லிருந்து ரஜினி அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று சொல்லிவிட்டு தற்போது வரை அதற்கான எந்த ஒரு அறிகுறியும் வெளியிடாமல் இருக்கிறார். இதை ஏமாற்று வேலை என நினைக்கிறார் சத்யராஜ். அதுமட்டுமில்லாமல் கர்நாடகரான ரஜினி அரசியலுக்கு வருவதையும் சத்யராஜ் விரும்பவில்லை போல தெரிகிறது’ எனக் கூறியுள்ளார்.