Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்காரை கழட்டிவிட்ட 'சன்பிக்சர்ஸ்': காரணம் என்ன?

Webdunia
புதன், 25 ஜூலை 2018 (15:59 IST)
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி மற்றும் ஒருசில ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்புகள் மட்டும் அமெரிக்காவில் படமாக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டதாகவும், இந்த படத்தின் உலகம் முழுவதுமான ரிலீஸ் உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி விலைக்கு பெற்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரபலம் இல்லாத நடிகர்கள் நடித்த படங்களை கூட தனது பிரமாண்டமான புரமோஷன் மூலம் வெற்றிப்படமாக்கிவிடும் நிறுவனம் என்ற பெயரை பெற்ற நிறுவனம். அப்படி இருக்கும் நிலையில் மாஸ் நடிகரான விஜய் நடித்த படத்திற்கு செய்யும் புரமோஷன் குறித்து கேட்கவே வேண்டாம். இந்த நிலையில் திடீரென படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு விற்க வேண்டிய அவசியம் என்ன? என்பதே பலரது கேள்வியாக உள்ளது

'சர்கார்' திரைப்படம் அரசியல் படம் என்பதால் இந்த படத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து கட்சிகளையும் தாக்கும் விதத்தில் வசனங்கள் இருப்பதாகவும், பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த படத்தை சொந்தமாக ரிலீஸ் செய்வதன்மூலம் திமுகவுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை மொத்தமாக ஸ்ரீதேனாண்டாள் நிறுவனத்திற்கு விற்பனை செய்துவிட்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாரா கலைக்கூடம் தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ.ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் "ஆகக்கடவன"

24000 நடன அசைவுகள்.. கின்னஸ் சாதனை படைத்த சிரஞ்சீவி!

படத்தின் கலெக்‌ஷன் பற்றி கவலைப்படாமல் ரசியுங்கள்… ரசிகர்களுக்கு சூர்யா வேண்டுகோள்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

என் படம் பிடிக்கலன்னா இன்பாக்ஸ்ல வந்து திட்டுங்க… இயக்குனர் சீனு ராமசாமி வேதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments