Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் விஜய்யின் கோரிக்கை நிராகரிப்பா ???

Advertiesment
Master movie
, வியாழன், 31 டிசம்பர் 2020 (16:27 IST)
நடிகர் விஜய்  சமீபத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, மாஸ்டர் படம் வரும் ஜனவரி 13 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதால் தியேட்டரில் 50% பார்வையாளர்களிலிருந்து எண்ணிக்கையை 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்தார்.

இதனால் தமிழகத்திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டர் கலாச்சாரம் மீண்டும் துளரிக்கவுள்ளதாக நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தனர். நடிகர் தனுஷும் விஜய் படத்திற்கு ஆதரவு தெரிவித்து தியேட்டரில் மாஸ்டர் படம் பார்க்குமாறு கூறினார்.

தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாட்டுகளின்படி  வரும்  ஜனவரி 31 ஆம் தேதி வரை கொரோனா ஊரடங்கு சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதில் திரையரங்குகளுக்கான கூடுதல் இருக்கைகளுக்கான அனுமதி 50% லிருந்து 100% உயர்த்துதல் எதுவும் தற்போது வெளியாகவில்லை.
Master movie

சினிமா, சின்னத்திரை படப்பிடிப்பு தளங்களில் பணிபுரிவோர் எண்ணிக்கை உச்சவரம்பு எண்ணிக்கை தளர்த்தப்பட்டுள்ளது.

எனவே விஜய்யின் கோரிக்கை நிராகரிக்கபட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Master movie

ஒருவேளை திரையரங்குகளில் கூடுதல் இருக்கைகளுக்கான அனுமதி 50% லிருந்து 100% உயர்த்துதல் பற்றி தனி அறிவிப்பு வெளியாகலாம் என விஜய் ரசிகர்கள் மற்று சினிமாதுரையினரும் திரையரங்க உரிமையாளர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேவதையே தோற்றுப்போகும் அழகில் நடிகை ஸ்ரீ திவ்யா - கியூட் போட்டோஸ்!