பிரபல நிறுவனமான சோனி- மார்வெல் கூட்டுத் தயாரிப்பில் 3 வது படமாக கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகி வசூல் வாரிக்குவித்து வரும் படம் ஸ்பைடர் மேன்: நொ வே ஹோம். இப்படம் அவெஞ்சர்ஸ் எப்ண்ட்க் கேம் என்ற படத்திற்குப் பிறகு வெளியான முதல்நாள் அன்று அதிக வசூல் செய்ததில் 2வது இடம் பிடித்துள்ளது.
சிறந்த பொழுதுபோக்குப் படமாக அமைத்துள்ள ஸ்பைடர் மேன் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தைத் தயாரித்துள்ள மார்வெல் – சோனி நிறுவனங்களுக்கு இடையே காப்புரிமை தொடர்பான கருத்துவேறுபாடுகள் எழுந்ததால் இவ்விரு நிறுவனங்களும் இனிப் பிரிவதாக அறிவித்த நிலையில் ஸ்பைடர்மேன்: நோ வே ஹொம் படத்தை இணைந்து தயாரித்தனர். இந்நிலையில் இவ்விரு நிறுவனங்களும் இணைந்து அடுத்த படத்தில் பணிபுரிவார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து மார்வெல் ஸ்டுவியோஸ் தலைவர் கெவின் பீஜ், அடுத்த படம் குறித்து டிஸ்னி நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.