Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆகஸ்ட் 14ல் ஓடிடி-யில் ரிலீசாகிறதா விஜய்யின் மாஸ்டர் ?

ஆகஸ்ட் 14ல் ஓடிடி-யில் ரிலீசாகிறதா விஜய்யின் மாஸ்டர் ?
, செவ்வாய், 4 ஆகஸ்ட் 2020 (16:25 IST)
நடிகர் விஜய் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.  இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இந்த வருடத்தில் இப்படம் மிகுந்த எதிர்ப்பார்வை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் கோடை காலவிடுமுறையைக் குறிவைத்து வெளிவருவதாக இருந்த நிலையில், கொரோனா கால ஊரடங்கால் அதன் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாளவிகா மோகனுக்கு விஜய் ரசிகர்கள் காமன் டிபி வெளியிட்டு டிரெண்டிங் செய்துள்ளனர்.

இதுகுறித்து மாளவிகா மோகனன், இந்தப் பிறந்தநாளை மாஸ்டர் டீமுடன் நான் கொண்டாட நினைத்திருந்தேன். ஆனால் ஸ்டுபிட் கோவிட் என தனது டுவிட்டரில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், கொரொனா ஊரடங்கு எப்போது முடியும் என தெரியாத சூழ்நிலையில், ரிலீசுக்கு தயாராகியிருந்த படங்கள் ஓடிடிதளத்தில் வெளியானது.

அதேபோல் விஜய்யின் மாஸ்டர் படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி சுதந்திரதினத்தை முன்னிட்டு அமேசான் பிரைம்மின் இப்படம் வெளியாகும் என இணையதளத்தில் ஒரு தகவல் வைரல் ஆகி வருகிறது.

ஆனால் இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாஸ்டர் புதிய போஸ்டர் - மாளவிகாவிற்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு!