Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் உருவாகும் ‘வடக்கன்’- புதிய படத்தின் கவனிக்கவைக்கும் போஸ்டர்

Webdunia
வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (08:00 IST)
எழுத்தாளராகவும், திரைப்பட வசனகர்த்தாவாகவும் அறியப்படும் பாஸ்கர் சக்தி முதல் முறையாக ஒரு படத்தை இயக்க உள்ளார். எம்டன் மகன், அழகர்சாமியின் குதிரை உள்ளிட்ட படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பாஸ்கர் சக்தி, பல சின்னத்திரை சீரியல்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் அவர் முதல் முறையாக ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. வடக்கன் என்று பெயரிடப்பட்டுள்ள் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கை இயக்குனர் சுசீந்திரன் தொடங்கி வைத்துள்ளார்.

சமீபகாலமாக வட இந்தியர்கள் தமிழ்நாட்டுக்கு புலம் பெயர்வது சம்மந்தமாக இருவேறு விதமான கருத்துகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. அந்தவகையில் படத்தின் தலைப்பே வடக்கன் என இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை டிஸ்கவரி சினிமா என்ற நிறுவனத்தின் மூலமாக வேடியப்பன் தயாரிக்கிறார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments