Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் “டாக்சிக் - எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” படப்பிடிப்பு, பெங்களூரில் வரும் 8 ஆகஸ்ட் முதல் துவங்குகிறது!

Advertiesment
Rocking star yash

J.Durai

, புதன், 7 ஆகஸ்ட் 2024 (20:36 IST)
நடிகரும் தயாரிப்பாளருமான யாஷ், தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் கர்நாடகாவில் உள்ள ஸ்ரீ சதாசிவ ருத்ர சூர்யா கோயில், தர்மஸ்தலாவில் உள்ள ஸ்ரீ மஞ்சுநாதேஸ்வரர் கோயில் மற்றும் கர்நாடகாவில் உள்ள சுப்ரமண்யாவில் உள்ள குக்கே சுப்ரமண்யா கோயில் என பல கோயில்களில் வழிபாடு செய்தனர்.
 
இந்த எதிர்பாராத நிகழ்வு  ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.  எந்தவொரு புதிய திரைப்படத்தையும் தொடங்குவதற்கு முன்பாக, கோயில்களுக்குச் செல்லும் யாஷின் சடங்குடன் இது ஒத்துப்போகிறது என்று குறிப்பிட்டு, ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். படக்குழு உறுதிப்படுத்திய தகவலின் படி, கீது மோகன்தாஸ் இயக்கும் இப்படம் ஆகஸ்ட் 8, 2024 அன்று (8-8-8) பெங்களூரில் துவங்கவுள்ளது.
 
இத்திரைப்படம் துவங்கும்  தேதியின் கூட்டுத்தொகை 8-8-8 ஆகும். ராக்கிங் ஸ்டார் யாஷுக்கு ராசியான நம்பரான 8 என்பது குறிப்பிடதக்கது.  மேலும் இது அவரது பிறந்த  தேதியுடன் பொருந்துகிறது, அவர் பிறந்த நாளில் தான்,  டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் படத்தின்  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் கல்யாணம் எப்போது?... சீக்ரெட்டை உடைத்த பிரியா பவானி சங்கர்!