Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகிபாபுவுக்கு தங்கையா யாஷிகா? 'ஜாம்பி' பட இயக்குனரின் பரபரப்பு பேட்டி

Webdunia
புதன், 24 ஏப்ரல் 2019 (22:41 IST)
காமெடி நடிகராக இருந்து வரும் யோகிபாபு, ஹீரோவாக புரமோஷன் ஆகும் படம் 'ஜாம்பி'. இந்த படத்தின் கதை இரவில் தொடங்கி காலையில் முடியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. யோகிபாபுவின் நண்பர்கள் மூவர் மகாபலிபுரம் சாலையில் உள்ள ஒரு பேய்பங்களாவில் மாட்டிக்கொள்ள அவரை காப்பாற்ற செல்லும் யோகிபாபுவும் அந்த பங்களாவில் சிக்குகிறார். அதன் பின்னர் யோகிபாபு உள்ளிட்ட நால்வரையும் யாஷிகா எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் கிளைமாக்ஸில் யாஷிகா கேரக்டரில் ஒரு ரகசியமும் ஒளிந்துள்ளதாம்
 
இந்த நிலையில் இந்த படத்தில் யோகிபாபுவுக்கு ஜோடியாக யாஷிகா நடித்து வருவதாக சில ஊடகங்களிலும் தங்கையாக நடித்து வருவதாக சில ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வருகிறது. இதுகுறித்து பேட்டி அளித்த இந்த படத்தின் இயக்குனர் புவன்நல்லான், யோகிபாபுவுக்கு யாஷிகா ஜோடியும் இல்லை, தங்கையும் இல்லை, இது வேற மாதிரியான ஒரு புனிதமான உறவு, அது என்ன உறவு என்பதை படம் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்' என்று சஸ்பென்ஸ் வைத்தார். 
 
யோகிபாபு, யாஷிகா, மனோபாலா, கோபி, சுதாகர், உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார். எஸ்3 பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த படம் வரும் ஜூலையில் வெளியாகவுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தூக்க கலக்கத்தில் நடந்துவிட்டது.. நிவின்பாலி மீது குற்றஞ்சாட்டிய பெண் அந்தர் பல்டி..!

ட்ரெண்டாகும் #சுயநலவாதி வெங்கட்பிரபு! அஜித் ரசிகர்கள் கொந்தளிப்பு! - என்ன காரணம்?

’ஜெயிலர்’ பட வில்லன் விநாயகன் கைது.. என்ன காரணம்?

நவம்பர் 1-ஆம் தேதி முதல் எந்த படப்பிடிப்பும் நடக்காது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் -தென்னிந்திய நடிகர் சங்கம் வலியுறுத்தல்!!

சிம்ரன் தனது புதிய படமான 'தி லாஸ்ட் ஒன்' மூலம் திரையுலகில் 28 ஆண்டுகளைக் கொண்டாடுகிறார்!

அடுத்த கட்டுரையில்
Show comments