Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருச்சிகம்: கார்த்திகை மாத ராசி பலன்கள் 2021

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (18:25 IST)
(விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை) - போராடும் குணமுடைய விருச்சிக ராசியினரே இந்த மாதம் எல்லா வகையிலும்  நற்பலன்கள் உண்டாகும். வாழ்க்கையில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகலாம். மனதுக்கு பிடித்தமான காரியங்களை செய்து மனநிறைவடைவீர்கள். உங்களது செயல்களை  மற்றவர்கள் பாராட்டுவார்கள்.


முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சுய நம்பிக்கை அதிகரிக்கும். வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி அலுவலக வேலைகளில் ஆர்வம் காட்டுவீர்கள். முன்னேற்ற வாய்ப்புகள் கிடைக்கும். 
 
தொழில், வியாபரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்கள் எதிர்பாராத வளர்ச்சி காண்பார்கள். மனதில் தைரியம் கூடும்.  குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். நீங்கள் கூறும் வார்த்தைகளுக்கு மதிப்பு உண்டாகும். 
 
கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பெண்களுக்கு சுய நம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்கள் உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். 
 
விசாகம் 4:
குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன், மனைவிக் கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும்.
 
அனுஷம்:
மற்றவர்களுடன்  வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே  இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக் காக பாடுபட வேண்டியும் இருக்கும்.
 
கேட்டை:
தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது.  உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும். உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு எவ்வளவு திறமையாக படித்தாலும்பாடங்கள் கடினமானவை போல தோன்றும். 
 
பரிகாரம்: கார்த்திகை தினத்தன்று  விரதம்  இருந்து முருகப் பெருமானுக்கு  தீபம் ஏற்றி வணங்க பிரச்சனைகள் தீரும். மனோ தைரியம் கூடும். 
சந்திராஷ்டம தினங்கள்: நவம் 22, 23, 24
அதிர்ஷ்ட தினங்கள்:  டிசம் 4, 5.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் லக்ஷ்மி கடாக்ஷத்துடன் வாழ சில மந்திரங்கள்...!

மூலாதாரக் குண்டலினி; வள்ளலார் அருளுரை

கணவன் மனைவி உறவை மேம்படுத்தும் குபேர மூலை!

வாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி அமைக்கும் முறை..

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments