Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு !

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு !
, திங்கள், 22 மார்ச் 2021 (18:01 IST)
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்லில் 6 இடங்களில் போட்டியிடுகிறது. 

 
இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை சென்னை தி நகரில் உள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அக்கட்சியின் தலைமை  வெளியிட நாடாளுமன்ற உறுப்பினரும், மாநில துணை செயலாளர் கே.சுப்புராயன் பெற்றுக் கொண்டார். 
 
பின்னர் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுமாநில துணை செயலாளர் சுப்புராயன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்திய அரசியலில் புதிய மாற்றம் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார். மாநிலத்தில் மத்திய அரசின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது என குற்றம் சாட்டினார். 
 
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பாஜகவை எதிர்த்து எதிர்கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகள் வெற்றி பெற்றுள்ளது. எனவே, பாஜக இந்த சட்டப்பேரவை தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது என தெரிவித்தார். 
 
மாநில துணை செயலாளர் சுப்புராயன் பேட்டி: இது தமிழகத்திற்கான தேர்தல் என்றாலும் மத்திய அரசு தீய செலவாக்கை பயன்படுத்தி வருகிறது. என குற்றம் சாட்டினார். பாஜக அதிமுகவிற்கு எதிரான வாக்குகள் திமுக கூட்டணிக்கு சென்று விடாமல் பலமுனை போட்டியை பாஜக உருவாக்கியுள்ளது.
 
சீமான், மற்றும் ஜாதிய அமைப்புகளை தூண்டி விட்டு போட்டியிட வைத்துள்ளது. அவரது பிரச்சாரமும் பாஜக அரசுக்கு எதிராக மட்டுமல்லாமல் திமுகவிற்கு எதிராகவே இருப்பதாக குற்றம் சாட்டினார். தமிழக அரசியலில் மய்யம் என்பது இல்லை ஒன்றிய இடதுசாரி அல்லது அவரை சாரி இரண்டு மட்டுமே என்றும் இதற்கு மாறாக நடுநிலை எனக் கூறுபவர்கள் திமுக வெற்றியை தடுப்பதற்காகவும் வாக்குகளை பிடிப்பதற்காகவே போட்டியிடுவதாக குற்றம் சாட்டினார்.
 
தமிழகத்தின் நீர்வாளத்தை பெற, மாநில அரசு சக்தியற்ற அரசாக உள்ளது் கர்நாடகவில் பாஜக அதிகாரத்தில் உள்ளது. திமுக, மற்றும் கூட்டணி கட்சிகள் ஒன்றிணைத்து பாஜக வர கூடாது என்று இந்த தேர்தலில் வெற்றியை நோக்கி நிற்கும் போது, அந்த வாக்குகளை சிதறடிக்கும் வகையில் பாஜக ஏந்தியுள்ள ஆயுதம் தான் தமிழ் தேசியம். என சுப்புராயன் குற்றம் சாட்டினார்.
 
மேலும் இன்றைய நிலைமையில் 3ல் ஒரு பங்கு ஏழைகள் இந்தியாவில் உள்ளனர். 18 லட்சம் கோடி தான் தமிழ் நாட்டின் ஜிடிபி. தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.  தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும், கிராம புற மக்கள் ,நகர்புறம் நோக்கி வராமல் இருக்க கிராமப்புற சிறு குறு தொழிலுக்கு நாங்கள் முக்கியதும் கொடுத்துள்ளோம். அதேபோல் விவசாய நலன் சார்ந்த திட்டங்களுக்கும் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.
 
தமிழ் தேசியம் என்பது வேறு சீமான் கோஷம் என்பது வேறு. தமிழ் நாட்டில் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகள் அனைத்தும் திமுக வை தான் ஆதரிக்கிறார்கள் சீமானை தவிர. என தெரிவித்தார். தமிழ் தேசியத்திற்கு பாஜக ஆதரவானது அல்ல என்றும் குற்றம் சாட்டினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக, அதிமுகவினுடைய மற்றொரு அணி தான் கமல் அணி: ஆ. ராசா