Publish Date: Thu, 21 Jul 2016 (12:52 IST)
Updated Date: Thu, 21 Jul 2016 (12:56 IST)
2016-2017 நிதியாண்டிற்கான திருத்திய பட்ஜெட் தாக்குதலில் தோட்டக்கலைத்துறைக்கு ரூ:518.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் ஆதிமுக ஆட்சி அமைத்து தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் இது. அதனால் அனைவரிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்கள் மற்றும் தொழில் துறையில் இந்தியாவில் முன்னிலை வகித்துக் கொண்டிருப்பதால் இது மிக்கியமாக பட்ஜெடாக கருதப்படுகிறது. இதற்காக தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளார்.
தற்போது ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் துறைவாரியாக நிதி ஒதுக்கீட்டை அறிவித்து கொண்டிருக்கிறார். 2016-2017 நிதியாண்டுக்கான பட்ஜெட் திருத்திய மதிப்பீடு ரூ:1,48,175.09 கோடி. தமிழகத்தை பசுமை மிக்க மாநிலமாக பராமரிக்க தோட்டக்கலைத்துறைக்கு ரூ:518.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Abimukatheesh
Publish Date: Thu, 21 Jul 2016 (12:52 IST)
Updated Date: Thu, 21 Jul 2016 (12:56 IST)