Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா - வீடியோ பாருங்கள்

Advertiesment
Actres oviya
, ஞாயிறு, 17 ஜூன் 2018 (14:28 IST)
பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் நடிகை ஓவியா கலந்து கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.

 
விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி மூலம் ஓவியா உள்ளிட்ட சிலர் மக்களிடையே பிரபலமானார்கள். இதனால், அவர்களுக்கு சினிமா வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது.   
 
அந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அதன் 2ம் பாகத்தையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் 2 சீசனின் முதல் நிகழ்ச்சி இன்று மாலை 7 மணிக்கு தொடங்குகிறது. 
Actres oviya

 
இந்த நிகழ்ச்சிக்காக ஒரு புரோமோ வீடியோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், மேடைக்கு வரும் ஓவியாவிடம் ‘இதையெல்லாம் பார்க்காமல் போன முறை பாதியிலேயே நீங்கள் சென்றுவீட்டீர்கள். சரி.. உள்ளே செல்லுங்கள்’ என கமல்ஹாசன் கூற, சூட்கேஸை எடுத்துக்கொண்டு ஓவியா பிக்பாஸ் வீட்டின் உள்ளே செல்கிறார்.
 
இதைக்கண்ட ஓவிய ரசிகர்கள் பலத்த மகிழ்ச்சியையு, ஆரவாரத்தையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா? அவர் எதற்காக இன்று பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்? என்பது சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பஸ் 2 நிகழ்ச்சி - வித்தியாசமான கெட்டப்பில் கமல்ஹாசன்