Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டம் 100 சதவீதம் வெற்றி: ஸ்டாலின் பேட்டி

Webdunia
வியாழன், 5 ஏப்ரல் 2018 (17:01 IST)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
காவிரி மேலான்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திமுக தீவிர போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. இன்று திமுக சார்பாக தமிழகமெங்கும் கடையடைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் 5ம் நாளாக இன்று திமுக போராட்டத்தை கையில் எடுத்தது. சென்னை அண்ணாசாலையில் செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வி.சி.க, காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகளும் பங்குபெற்றனர்.

அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலினை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
 
””உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்த  பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மோடி தலைமையிலான மத்திய அரசு காலம் தாழத்தி வருகிறது. இதற்கு துணையாக எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது.
 
இதனை கண்டிக்கும் வகையில் உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி  தமிழ்நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தி உள்ளோம்.  இந்த போராட்டம் 100 சதவீத அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments