நவம்பர் மாதம் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையின் ரயில் முன்பதிவு தொடங்கிய நில நிமிடங்களில் தீர்ந்து போனது.
ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக்கு சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் நபர்கள் ரயில் முன்பதிவு செய்வது வழக்கம். இந்த வரும் நவம்பர் 6ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதற்கான ரயில்வே முன் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
திங்கட் கிழமை ஒரு நாள் விடுமுறை எடுத்தால் சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் என 4 நாட்கள் விடுமுறை எடுக்கலாம் என்பதால் பலரும் வெள்ளிக்கிழமை இரவு புறப்படுவதற்கு டிக்கெட் முன்பதிவு செய்தனர். அதேபோல் சனிக்கிழமை இரவும், ஞாயிற்றுக்கிழமை இரவும் முன்பதிவு செய்தனர்.
பெரும்பாலானோர் ஒரே நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ததால் 7 நிமிடங்களில் முடிந்து போனது. இதனால், பலர் டிக்கெட் முன்பதிவு செய்யமுடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.