திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரனை கடுமையாக விமர்சனம் செய்து ஒரு கட்டுரை வெளிவந்தது. இந்த கட்டுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தினகரனும் பதிலடி கொடுத்து அறிக்கை ஒன்றை காட்டமாக வெளியிட்டார்.
இந்த நிலையில் இன்று கனிமொழி எம்பி அவர்களும் ஸ்டாலினுடன் மோத ஒரு தகுதி வேண்டும் என்று தினகரனை மறைமுகமாக விமர்சித்தார்.
இந்த நிலையில் ஸ்டாலின், - தினகரன் மோதல் இரு தரப்பிலும் இருந்து திட்டமிட்டே நடத்தப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இதுவரை அதிமுக-திமுக என்ற அரசியல் சூழல் இருந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் திமுக-அமமுக என்று மாற்ற வேண்டும் என்பதற்காகவே இருதரப்பினர்களும் மறைமுக ஒப்பந்தம் செய்து கொண்டு ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் அதிமுக கூட்டணிக்கு இணைய நினைத்த கட்சிகள் யோசிக்கும் என்றும் அதிமுகவுக்கு இதுவொரு பலவீனமாக அமையும் என்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.