Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வாழ்வில் வளம் தரும் உகாதி பண்டிகை! உகாதியில் வழிபாடு செய்வது எப்படி?

Ugadi

Prasanth Karthick

, திங்கள், 8 ஏப்ரல் 2024 (13:24 IST)
சைத்ர மாதத்தில் தொடங்கும் வசந்த காலத்தை குறிக்கும் முக்கிய நாளான உகாதி நாள் தெலுங்கு, கன்னட மக்களுக்கு புத்தாண்டு நாளாகவும் உள்ளது.



சைத்ர மாதத்தின் முதல் நாளில்தான் பிரம்ம தேவர் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணம் கூறுகிறது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாக கருதப்படுகிறது. மேலும் சைத்ர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பை குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

உகாதி தினத்தில் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து தெய்வங்களை வழிபட வேண்டும். உகாதி சிறப்பு பட்சணங்களான உகாதி பச்சடியுடன் பலவித உணவுகளையும் செய்து மக்கள் உகாதியை கொண்டாடுகிறார்கள். உகாதி புத்தாண்டில் பஞ்சாங்கம் படிப்பது சிறப்பு மிக்கது ஆகும். இதனால் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நீடிக்கும் என்பது நம்பிக்கை.

உகாதி அன்று பிரம்ம முகூர்த்த வேளையில் சூரிய உதயத்திற்கு முன்பாக பூஜை அறையில் 5 தீபங்கள் ஏற்ற வேண்டும். மஞ்சள் அல்லது சாணத்தால் விநாயகர் பிடித்து வைக்க வேண்டும். பின்னர் விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி நைவேத்தியம் செய்து தீப ஆராதனை காட்டி வழிபட வேண்டும். இவ்வாரு வழிபடுவதால் வாழ்வில் சகல நன்மைகளும் அடையலாம் என்பது ஐதீகம்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ராசிக்காரர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம்! – இன்றைய ராசி பலன்கள்(08.04.2024)!