Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பட்ஜெட் 2018-19 - 8 கோடி பெண்களுக்கு சமையல் எரிவாயு

பட்ஜெட் 2018-19 - 8 கோடி பெண்களுக்கு சமையல் எரிவாயு
, வியாழன், 1 பிப்ரவரி 2018 (11:35 IST)
மத்திய அரசின் சார்பாக 2018ம் ஆண்டின் ரயில்வே மற்றும் பொருளாதார  பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தற்போது பாராளுமன்றத்தில்  தாக்கல் செய்து வருகிறார்.

 
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர்  அருண் ஜேட்லி இன்று காலை 11 மணிக்கு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
 
அப்போது உரையாற்றி அவர் உலகின் 5வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா விரைவில் உருவாகும். சராசரியாக 3 ஆண்டுகளில் 7.5% வளர்ச்சியை எட்டியுள்ளோம் என தெரிவித்தார்.  அதன் பின் அறிவிவித்த சலுகைகள் ஆவது:
 
விவசாய உள்கட்டமைக்கு ரூ.22,000 கோடி ஒதுக்கீடு 
 
2018-2019 ஆண்டுக்கான விவசாய கடன் இலக்கு ரூ.11 கோடியாக உயர்த்தப்படும்.
 
விவசாயிகளுக்கான கிஸான் கார்டு மின்வளம் மற்றும் கால்நடை துறைகளும் விரிவுபடுத்தப்படும்.
 
மீன்வளம் மற்றும் கால்நடைதுறைகளுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
மூங்கில் மரம் வளர்ப்புக்கு ரூ.1,029 ஒதுக்கீடு
 
இந்தியாவின் நேரடி மானியத் திட்டம் உலக அளவில் பேசப்படுகிறது. 8 கோடி ஏழைப் பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
 
மகளிர் உதவிக்குழுக்கு 75 ஆயிரம் கோடி மற்றும் 8 கோடி ஏழை பெண்களுக்கு சமையல் எரிவாய் வழங்கப்படும் என அறிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

2018-19ம் ஆண்டின் பட்ஜெட் : உரையை தொடங்கினார் அருண்ஜேட்லி