ஆமணக்கெண்ணெய் பொதுவாக வயிற்றைச் சுத்தம் செய்வதற்காகவும், வயிற்றுப் பூச்சிகளை வெளியேற்றுவதற்காகவும் பயன்படுத்தப் படுகின்றது. ஆயுர்வேத மருத்துவத்தில் வாயுத் தொல்லைகளை விலக்க உதவுகின்றது. ஆமணக்கு எண்ணெய், இலைகள், வேர், விதை, காய்கள் அத்தனையும் மருந்தாகப் பயன் தருகின்றன.