மனிதன் செயல்பாடுகளை நிர்ணயிக்கும் "வடமேற்கு" மூலை
வாஸ்து நிபுணர் - ஆண்டாள் பி.சொக்கலிங்கம்
, ஞாயிறு, 5 ஜனவரி 2014 (14:59 IST)
மனிதன் உயிர் வாழ்விற்கு இயற்கையிலிருந்து தரப்படும் அடிப்படை தேவை காற்று. இது பஞ்சபூதங்களில் மூன்றாவது மூலக்கூறாக கருதப்படுகிறது. வாஸ்துவில் வடமேற்கு மூலையே காற்றுக்கு ஆதாரமாக உள்ளது. இதனை "வாயு மூலை" என்றும் கூறுவர். ஒரு இடத்தின் வடமேற்கு மூலையை வாஸ்து விதிகளுக்கு உட்படுத்தி கட்டடம் கட்டுவது அவசியமாகும்.
வடமேற்கு உள்மூலையில் வரக்கூடியவை:
கழிவறை (உட்காரும் முறை: வடக்கு/தெற்கு நோக்கி அமருவது நல்லது)
தொழில் நிறுவனம் என்றால் விற்க வேண்டிய பொருட்களை வைக்கவேண்டும்.
வடமேற்கு வெளிமூலையில் வரக்கூடியவை:
கழிவு நீர் தேக்கும் தொட்டி(Septic tank)
Inverter/EB Box/Generator
வடமேற்கு மூலையில் (உள் மற்றும் வெளி மூலைகள்) வரக்கூடாதவை:
பணப்பெட்டி வைக்கும் அறை
படிக்கும் அறை
கிணறு / ஆழ்துளை கிணறு / பள்ளம் / மேடு
போர்டிகோ (Portico)
மேல்நிலை தண்ணீர் தொட்டி
உயரமான மரங்கள்
உள்மூலை படிக்கட்டு
வெளிமூலை மூடப்பட்டு தூண்கள் போட்ட படிக்கட்டு