Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பன்னீர் சீஸ் பால்ஸ் செய்ய !!

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (14:28 IST)
தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3
பன்னீர் - 500 கிராம்
வெங்காயம் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
கேரட் - 1/2 கப் (துருவியது)
சீஸ் - 1/2 கப் (துருவியது)
கார்ன் - தேவைக்கேற்ப
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
கார்ன்ஃப்ளார் - தேவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு
உப்பு - தேவைக்கேற்ப
ப்ரெட் தூள் - தேவைக்கேற்ப



செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து கொள்ளவும். அதில் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், சீஸ், கார்ன், துருவிய பன்னீர், கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ளதை சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். கார்ன் ப்ளாரில் தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் கிழங்கு உருண்டைகளை முக்கி எடுத்து, பின்னர் ப்ரெட் தூளில் பிரட்டவும்.

இந்த உருண்டைகளை எண்ணெய்யில் போட்டு பொரிக்கவும். உருண்டைகள் வெந்து பொன்னிறமானதும் எண்ணெய்யில் இருந்து எடுக்கவும். சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்தும் கல்பவிருக்‌ஷா வருடாந்திர கண் மருத்துவவியல் கல்வி பயிலரங்கின் 17-வது பதிப்பு!

சிறுகீரை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள்..!

முட்டைகோஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

தினசரி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments