அரிசி - 1 பிடி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கம்பை கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு தண்ணீரை நன்கு வடித்து நிழலில் காயவைத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும். பொடித்த கம்பு மாவை தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். இதனை அப்படியே ஒருநாள் முழுவதும் புளிக்க வைக்கவேண்டும்.
கூழ் செய்வதற்கு அரிசியை நொய்யாக உடைத்து, தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து முக்கால் பாகம் வெந்ததும், கரைத்து புளிக்க வைத்த கம்பு மாவை இதில் சேர்த்து கட்டி இல்லாதவாறு கலந்து விட வேண்டும். அரிசியுடன் இந்த மாவையும் நன்கு வேகவிட வேண்டும். நன்கு வெந்துவுடன் இறக்கி, மறுநாள் காலையில் உப்பு சேர்த்து கரைத்து இதனுடன் தயிரும் சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொள்ளலாம். ஆரோக்கியம் நிறைந்த, கோடைக்கு குளிர்ச்சி தரும் கம்பங்கூழ் தயார்.
பயன்கள்:
இதில், இரும்புச்சத்து மிக அதிகம். ரத்தசோகை இருப்பவர்களுக்கு மிக நல்ல உணவு. கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவு.
தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஆகியவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.