Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவை மிகுந்த புடலங்காய் வறுவல் செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
புடலைங்காய் - 400 கிராம் 
கடலை மாவு - 3 மேஜைக்கரண்டி 
சோள மாவு - 2 மேஜைக்கரண்டி 
மிளகாய் தூள் - 1 மேஜைக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
உப்பு - தேவையான அளவு 
கறிவேப்பிலை - சிறிது 
செய்முறை:
 
புடலங்காயின் தோலை சீவி அதன் உள்ளே இருக்கும் வெள்ளையான பகுதியை எடுத்து விட்டு நீளவாக்கில் வெட்டி வைக்கவும். பிறகு அதன் மேல் கடலை மாவு,  சோளமாவு, மிளகாய் தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து எல்லா இடங்களிலும் படும் படி நன்றாக கலந்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.
 
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிதமான சூட்டில் வெட்டி வைத்துள்ள புடலைங்காய் துண்டுகளை கடாய் கொள்ளும் அளவுக்கு போட்டு  பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
 
மீதமுள்ள எல்லா புடலைங்காய் துண்டுகளையும் இதே முறையில் பொரித்து எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும். எண்ணெய் உறிஞ்சியவுடன் பாத்திரத்தில்  எடுத்து வைக்கவும். கடாயில் உள்ள அதே எண்ணெயில் கறிவேப்பிலையை போட்டு பொரித்து வறுத்து வைத்துள்ள புடலைங்காயின் மேல் தூவி விடவும்.  சுவையான புடலங்காய் வறுவல் தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments