Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி பலகாரம் தட்டை செய்ய....!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
அரிசி மாவு - 2 கப்
உளுத்தம் பருப்பு மாவு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - தேவையான அளவு
கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் (ஊறவைத்தது)
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
 
முதலில் கடலைப் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, கழுவி காய வைக்க வேண்டும். பின்னர் ஒரு கடாயில் அரிசி மாவு, உளுத்தம் பருப்பு மாவு, மிளகாய் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் போட்டு கலந்து, சிறிது தண்ணீர்  ஊற்றி, ஓரளவு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.
 
பின்பு ஒரு பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி, ஒரு சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து, அதில் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ளவேண்டும். பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள  தட்டையைப் போட்டு பொன்னிறமாக இரண்டு பக்கமும் பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான தட்டை (எள் அடை) தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

தினசரி மிளகு ரசம் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

ஆண்டிபயாடிக் மருந்துகளால் 10 லட்சம் இந்தியர்கள் பலி? - அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவு!

சர்க்கரைக்கு பதில் கருப்பட்டி பயன்படுத்துங்கள்.. கருப்பட்டியால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

ஏழைகளின் ஆப்பிள் நெல்லிக்கனியில் உள்ள சத்துக்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments