தேவையான பொருள்கள்:
காபி பவுடர் - 2 ஸ்பூன்
சர்க்கரை - 2 ஸ்பூன்
வெந்நீர் - 2 ஸ்பூன் (மிதமான சூட்டில்)
செய்முறை:
காபி பவுடர், சர்க்கரை, வெந்நீர் மூன்றும் சம அளவிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும். பால் நீங்கள் காய்ச்ச வேண்டிய அவசியமே கிடையாது. ஃபுல் க்ரீம் எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் ஃபிரிட்ஜில் வைத்த ஜில்லென்ற பால் என்றால் மதிய வேளையில் குடிக்க சுவையாக இருக்கும்.
ஒரு பௌல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் காபி பவுடரும் அதே அளவு சர்க்கரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது சர்க்கரையும் காபி பவுடரும் அளந்த அதே ஸ்பூனில் 2 ஸ்பூன் மட்டும் வெந்நீர் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
இதை ஒரு ஸ்பூன் எடுத்து நன்கு கலந்து விட்டு, கட்டிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இப்போது ஸ்பூனால் (முட்டை கலக்குவதை கொண்டு) அல்லது ஹேண்ட் பிளண்டரில் கொஞ்சம் வேகமாக நன்கு அடிக்கவேண்டும். நன்கு அதாவது காபி பொடியின் பிரௌன் கலர் வெளுப்பான நிறத்தில் றும் வரை நன்கு அடிக்க வேண்டும்..
அவ்வாறு மாறும்போது தான் சரியான பதத்தில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம். இதனை ஒரு கிளாஸ் எடுத்து முக்கால் டம்ளர் அளவுக்கு பால் ஊற்றி அதற்கு மேல் அப்படியே க்ரீமியா அடித்து வைத்துள்ள காபி க்ரீமை அதன்மேல் வைக்கவேண்டும். அது திக்கா க இருப்பதால் பாலோட கலக்காமல் மிதக்கும். அவ்வளவு தான் சூப்பரான டல்கோனா காபி தயார்.
குறிப்பு: அது அவரவர் விருப்பம் போல் கிளாஸில் கொஞ்சம் ஐஸ்கட்டி போட்டு, அதன் மேல்கூட பால் ஊற்றிக் கொள்ளலாம்.