Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுவையான பூண்டு குழம்பு எப்படி செய்வது...?

Webdunia
தேவையான பொருட்கள்:
 
பூண்டு - 30 பல்
சின்ன வெங்காயம் - 20
தக்காளி - 1
தனியாத்தூள் - 2 தேக்கரண்டி
குழம்பு மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
புளி - நெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
கடுகு - 1 தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 1 /2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:
 
புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதில் மல்லித்தூள், குழம்புதூள், மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வைத்து  கொள்ளவும்.
 
வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளமான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டு சிறியதாக இருந்தால் நறுக்க வேண்டியதில்லை. தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
 
கடாயில் எண்ணெய் ஊற்றி, தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாகச் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், பூண்டை சேர்த்து நன்கு வதக்கவும்.
 
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி 5 நிமிடங்கள்  கொதிக்க விடவும். அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்து குழம்பு திக்காக ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். மணக்கும்  சுவையான பூண்டு குழம்பு தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments