Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

வாழைக்காயில் சுவையான கட்லெட் செய்ய !!

வாழைக்காயில் சுவையான கட்லெட் செய்ய !!
தேவையான பொருள்கள்:
 
வாழைக் காய் - 2
வெங்காயம் - 2
இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
கடலை மாவு - கால் கப்
கரம் மசாலாத் தூள்
மிளகாய்த் தூள் - தலா ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
சோம்பு - ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
பிரெட் தூள் - கால் கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை:
 
வாழைக்காயை முக்கால் பதமாக வேகவிட்டு தோலுரித்து, கேரட் துருவியால் துருவிக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை  தனித்தனியாக நறுக்கிக் கொள்ளவும்.
 
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு போட்டு வதக்கி, கரம் மசாலாத் தூள், மிளகாய்த் தூள், துருவிய  வாழைக்காயை போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் இறக்கி உப்பு, கடலை மாவு சேர்த்துக் கலந்து சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகப் - பிசையவும்.
 
கடைசியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். இந்தக் கலவையை விரும்பிய வடிவில் செய்து, பிரெட் தூளில் புரட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு, காய்ந்ததும் கட்லெட்டுகளை போட்டு பொரித்தெடுக்கவும்.  சுவையான  வாழைக்காய் கட்லெட் தயார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் வலிக்கு சில மருத்துவ குறிப்புகள்...?