Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பரான சுவையில் கடலைப்பருப்பு சட்னி செய்ய...!!

Webdunia
தேவையான பொருட்கள்:
 
கடலைப்பருப்பு - 1/2 கப்
தேங்காய் துண்டு - 2
வர மிளகாய் - 5
தக்காளி - 1 பெரியது
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
 
தாளிக்க தேவையான பொருட்கள்:
 
கடுகு - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு 
உளுத்தம் பருப்பு - சிறிதளவு 
பெருங்காயத்தூள் - சிறிதளவு 
எண்ணெய் - 1 ஸ்பூன்
செய்முறை:
 
வாணலியை அடுப்பில் வைத்து அதில் கடலைப்பருப்பை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்கவேண்டும். அடுத்து தேங்காய், வரமிளகாய், தக்காளி, கறிவேப்பிலையை தனித்தனியாக போட்டு நன்றாக வறுத்து குளிர வைக்கவும்.
 
அனைத்தும் நன்றாக ஆறியதும் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு மென்மையாக  அரைத்து கொள்ளவும்.
 
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து  தாளித்து அரைத்து சட்னியில் ஊற்றி கிளறவும். சுவையான கடலைப்பருப்பு சட்னி தயார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments