தேவையான பொருட்கள்: (வழி - 1)
கொத்தமல்லி - 1 கட்டு
தக்காளி - 1 (தோலுரித்து துண்டு)
பூண்டு - 5-6 பல்
பச்சை மிளகாய் - 3-4
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் கொத்தமல்லியை நன்கு சுத்தம் செய்து நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பின் மிக்ஸியில் அதனைப் போட்டு, அத்துடன் தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சீரகம் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்த, 1/4 கப் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டும். பின்பு அதனை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்தால், சட்னி சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்: (வழி - 2)
கொத்தமல்லி - 1 கட்டு
பச்சை மிளகாய் - 3-4
சீரகம் - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - சிறிது
தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொத்தமல்லியை நன்கு நீரில் அலசிக் கொள்ள வேண்டும். * பிறகு மிக்ஸியில் அதனைப் போட்டு, அதனுடன் தயிர், பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து அரைக்க வேண்டும். இறுதியில் வேர்க்கடலை சேர்த்து ஒருமுறை அரைத்தால், கொத்தமல்லி சட்னி தயார். இந்த சட்னியில் தயிர் சேர்த்திருப்பதால், இது வெள்ளை கலந்த பச்சையுடன் காணப்படும்.