Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

விநாயகருக்கு தோப்புக்கரணம் போடும் வழக்கம் எவ்வாறு வந்தது....?

விநாயகருக்கு தோப்புக்கரணம் போடும் வழக்கம் எவ்வாறு வந்தது....?
விஷ்ணு காத்தல் தொழில் செய்பவர். சக்ராயுதம் சக்தி இழந்ததால், அதிர்ச்சியடைந்த விஷ்ணு, வேறு ஒரு வலிமையான ஆயுதம் வாங்குவதற்காக சிவனை வழிபடச் சென்றார்.
அவ்வாறு செல்லும்போது வாசலில் இருந்த விநாயகப் பெருமானை வணங்காமல் விஷ்ணு உள்ளே சென்றார். இதனால் விஷ்ணு மீது விநாயகருக்கு கோபம் வந்தது. இதை அறியாத விஷ்ணு, சிவனை போற்றி வணங்கி 1000 தாமரை மலர்களால், சிவனின் ஆயிரம்  திருநாமங்களாகிய சஹஸ்ர நாமம் கூறி ஒவ்வொரு மலராக அர்ச்சனை செய்தார். 
 
மனம் மகிழ்ந்த சிவபெருமான் முன்பொரு முறை ஜலந்தாசுரன் என்ற அரக்கனை மாய்க்க தம் கால் நகங்களால் உருவாக்கி இருந்த சக்கரப் படையை விஷ்ணுவுக்கு கொடுத்தார். விஷ்ணு திரும்பி வரும்போது வாயிலில் இருந்த விநாயகப் பெருமான் வழிமறித்தார்.
 
விஷ்ணுவின் கையிலிருந்த சக்கரத்தை பிடுங்கி தம் வாயில் போட்டுக்கொண்டதை கண்டு அதிர்ந்த விஷ்ணு, விநாயகப் பெருமானை வணங்காது சென்றது தவறுதான் என்பதை உணர்ந்து தோப்புக்கரணம் போட்டார். இந்தச் கண்டு விநாயகர் கோபம் மறந்து சிரித்தார். அப்போது  அவர் வாயில் இருந்த சக்கரம் வெளியில் விழுந்தது. அதனை எடுத்து விநாயகப் பெருமானிடம் வணங்கி ஆசி பெற்றார் விஷ்ணு. இப்படி தோப்புக்கரணம் போட்டால் விநாயகர் மகிழ்ந்து அருள்புரிவார் என்பதாலேயே இச்செயல் நடைமுறைக்கு வந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விநாயகர் சதுர்த்தி நாளில் பூஜையின்போது செல்லவேண்டிய மந்திரங்கள்!!