Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

சினிமாவில் வெற்றி வாகை சூடிய சுதா கொங்கரா !

சினிமாவில் வெற்றி வாகை சூடிய சுதா கொங்கரா !
, செவ்வாய், 3 மார்ச் 2020 (17:16 IST)
சினிமாவில் வெற்றி வாகை சூடிய சுதா கொங்கரா !

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்பது இளைஞரின் பெருங்கனவாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக அறியப்பட்டுல்ளார் இறுதிச் சுற்று திரைப்படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா. 
 
சுதா கொங்கரா ஆந்திரப் பிரதேசம், விசாகப்பட்டினத்தில் பிறந்தவர். அங்கேயே தன் பள்ளிப்படிப்பை முடித்தவர். இவர் வரலாறு மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் படிப்பை தமிழகத்திலுள்ள  நாகர்கோயிலில் மகளிர் கிருத்துவக் கல்லூரியில் பயின்றுள்ளார்.
 
சுதா கொங்கரா தற்போது  இந்தியத் திரைப்பட பெண் இயக்குநராக பரவலாக அறியப்பட்டுள்ளார். திரைக்கதை ஆசிரியராக தமிழ் திரையுலகிலும், தெலுங்கு திரைத்துறையிலும், இந்தித் திரைப்பட உலகிலும் நன்கு அறியப்பட்ட இவர் திரைக்கதை அமைத்த இந்திய ஆங்கிலப் படமான மித்ர், மை ஃபிரண்ட் ( Mitr, My Friend) அந்த ஆண்டின் சிறந்த ஆங்கிலப் படத்திற்கான விருதாக 49ஆவது தேசியத் திரைப்பட விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. 
 
அத்துடன்,  இவர் துணை இயக்குநராக ஏழு ஆண்டுகள் மணிரத்தினத்திடம் பணியாற்றியவர் என்பது கூடுதல் சிறப்பு. 
 
அதன்பிறகு இவர் முதன் முதலில் இயக்கிய தமிழ்த் திரைப்படம் துரோகி (2010) ஆகும். இதன் பிறகு இவர் குத்துச்சண்டையை மையமாகக் கொண்ட திரைப்படத்திற்கான கதையை 2013 ஆண்டில் எழுதி, நடிகர் மாதவனிடம் கதையைச் சொல்லியுள்ளார்.

அப்போது, இக்கதையால் ஈர்க்கப்பட்ட நடிகர் மாதவன் இந்தத் திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். பின் அந்தப் படத்தயாரிப்புக்கும் தேர்வையான  உதவிகளைச்  செய்து படத்தை உயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்ல உதவினார். இந்தப் படம்தான் அதிரி புதிரியான வெற்றி பெற்ற இறுதிச் சுற்று !
 
மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டில் இவர் இந்தி திரையுலகில் சாலா காதூர்ஸ் திரைப்படத்தின் வழியாக நுழைந்தார்.
 
தற்போது , இவர், நடிகர் சூர்யாவை நடிப்பில் சூரறைப் போற்று என்ற படத்தை இயக்கி வருகிறார். ஏற்கனவே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இப்படத்தில் டிரைலர் பல மில்லியன்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
 
அடுத்து நடிகர் விஜய்யை வைத்து ஒரு திரைப்படம் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
 
அதன்பிறகு இவர் முதன் முதலில் இயக்கிய தமிழ்த் திரைப்படம் துரோகி (2010) ஆகும். இப்படத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீகாந்த், பூர்ணிமா ஆகியோர் நடித்திருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகளிர் தினம் : வணிக உலகில் வெற்றிக் கொடி நாட்டிய இந்திரா நூயி !