டாம் குருஸ் நடிப்பில் வெளியாகியுள்ள மிஷன் இம்பாசிபிள் படத்துக்காக 25 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து அவர் குதிக்க அபுதாபி அரசு போர் விமானம் தந்து உதவிய தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் டாம் குருஸ் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் ஃபால்அவுட் திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படத்தில் ஹெலோ ஜம்ப் என்ற சாகச காட்சி திரையுலக வரலாற்றில் முதன்முறையாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியை படம்பிடிக்க மூன்று வாரங்களுக்கு அதிநவீன போர் விமானம் தேவைப்பட்டுள்ளது.
பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிர்வாகிகள் இதற்காக அபுதாபி அரசின் ஊடகத்துறை அமைச்சகத்தை அணுகி சம்மதம் பெற்றனர். இதைதொடர்ந்து படக்குழுவினர் ஒருமாத காலம் அபுதாபியில் முகாமிட்டு போர் விமானத்தில் இருந்து கீழே குதிக்கும் காட்சியை படமாக்கியுள்ளனர்.
25 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் இருந்து 200 மைல் வேகத்தில் வீசிய காற்றை கிழித்துகொண்டு 94 முறை டாம் குருஸ் கீழே குதித்துள்ளார். மேலும் இந்த காட்சியை படமாக்கும் போது எந்த வித அசாம்விதமும் நடக்காமல் இருக்க அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு உடன் இருந்து உதவி செய்துள்ளனர்.