அட்லாண்டிக் கடல் பகுதியில் மட்டுமல்ல 7 பெருங்கடல் பகுதிகளிலும், இப்போதைக்கு திரைப்பட வசூலில் இமயம் என்றால் அது அக்வாமேன் தான்.
இதுவரை ஹாலிவுட்டில் வந்த துப்பறியும் காமிஸ் கதை படங்களிலேயே அக்வாமேன் தான் வசூலில் டாப். ஜாசன் மோசா நடிப்பில் கடந்த டிசம்பர் 14ம் தேதி வெளியான துப்பறியும் படமான அக்வாமேன், 1.09 பில்லியன் டாலர் வசூலை ஈட்டியுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 7,704.53 கோடி வசூலாகி உள்ளது.
வார்னர் போஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான படங்களிலேயே அக்வாமேன் தான் உலக அளவில் இரண்டாவது பெரிய அளவில் வசூலை ஈட்டிய படமாகும். Harry Potter மற்றும் Deathly Hallows – Part 2 ஆகிய படங்கள் 1.341 பில்லியன் டாலர் (Rs. 9,529.81 கோடி) வசூலை ஈட்டியுள்ளன. உலக அளவில் திரைப்பட வசூலில் 24 இடத்தை அக்வாமேன் பிடித்துள்ளது. டாக் நைட் ரைசஸ் படத்தின் வசூலையும் முறியடித்துள்ளது. ஜேம்ஸ் வார்ன் இயக்கிய இப்படத்தின் 71 சதவீத வசூல் (Rs. 5,501.85 கோடி) அமெரிக்காவை தாண்டி வெளியில் இருந்து தான் கிடைத்துள்ளது.