தாய்லாந்தில் புத்த துறவிக்கு 114 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
தாய்லாந்தை சேர்ந்த வைராபான் சுக்பான் என்ற முன்னாள் புத்த துறவி, ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டு அமெரிக்காவிற்கு தப்பியோடினார்.
இந்நிலையில் இதுகுறித்து விசாரித்து வந்த போலீஸார் வைராபால், ஏகப்பட்ட பண மோசடியில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனர்.
பல நன்கொடையாளர்களிடம் புத்தருக்கு மரகத சிலை செய்வதற்காக சுமார் 5 கோடி ரூபாய் பெற்றுவிட்டு அவர்களை ஏமாற்றியுள்ளார்.
இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து வைராபானை நாடு கடத்திய தாய்லாந்து அரசு அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. நீதிமன்றம் அவருக்கு 114 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.
மேலும் அவன் மீதுள்ள கற்பழிப்பு வழக்கில் வரும் அக்டோபர் மாதம் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.