120 இந்திய மாணவிகள் மலேசியாவில் சிக்கித் தவிப்பு
பிலிப்பைன்ஸ் நாட்டின் மருத்துவக்கல்லூரியில் படித்துவந்த 120 இந்திய மாணவ, மாணவிகள் கொரோனா பீதி காரணமாக அந்நாட்டில் இருந்து விரட்டப்பட்டதால், அவர்கள் இந்தியாவுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மலேசியா வழியாக இந்தியா திரும்ப அவர்கள் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்திற்கு வந்தபோது மலேசியாவில் இருந்து இந்தியா செல்லும் அனைத்து விமானங்களும் தடை செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் 120 இந்திய மாணவ, மாணவிகள் தற்போது மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் விமான நிலையத்திலேயே தஞ்சம் அடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த் 120 மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் மகன், மகள்களை மீட்டுத் தர வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் இதுகுறித்து உடனடியாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து அந்த மாணவ, மாணவிகளை இந்தியாவுக்கு பத்திரமாக திரும்பி கொண்டு வர ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்று கூறி வருகின்றனர்
இந்த 120 மாணவிகளில் நெல்லையை சேர்ந்த ஒரு மாணவியும் ஒருவர் என்பதும் அவரை உடனடியாக மீட்க உதவி செய்ய வேண்டும் என்ற அவரது பெற்றோர்கள் நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது