Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

48 மணி நேரத்தில் 15 ஆயிரம் குழந்தைகள் சாகப் போகிறார்கள்! காசாவை காப்பாற்றுங்கள்! - ஐ.நா வேண்டுகோள்!

Advertiesment
Gaza Starvation

Prasanth Karthick

, புதன், 21 மே 2025 (08:27 IST)

காசா மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் அங்குள்ள மக்களுக்கு கிடைக்க வேண்டிய மனிதாபிமான உதவிகளையும் நிறுத்தியுள்ளது.

 

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் இஸ்ரேல் தொடர்ந்து காசாவை தாக்கி வருகிறது. சமீபத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டு மக்கள் பலர் காசா திரும்பிய நிலையில் மீண்டும் போர் தொடங்கியது. கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரில் இஸ்ரேல் ராணுவத்தால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர்.

 

மேலும் காசாவை முழுவதும் தாக்கி வரும் இஸ்ரேல், அங்குள்ள பெண்கள், குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய மனிதாபிமான உதவிகள், மருத்துவ உதவிகளையும் உள்ளே செல்லவிடாமல் தடுத்துள்ளது. இதனால் மக்கள் பசி, பட்டினியால் சாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

 

இதுகுறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தைகள், கர்ப்பிணிகள் உள்பட 20 லட்சம் பேர் காசாவில் பசி, பட்டினியில் தவிப்பதாக தெரிவித்துள்ளது. 11 வாரங்களில் பசி, பட்டினியால் 57 குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் பல ஆயிரம் குழந்தைகள் பசியால் உயிரிழக்கும் சூழல் உள்ளதாக கவலைத் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனா சென்ற பாகிஸ்தான் துணை பிரதமர்.. வரவேற்க ஆளே இல்லாமல் அவமரியாதை..!